மதுரை உயர் நீதிமன்ற கிளை வளாகத்தில் நூற்றாண்டு பழமையான ‘கல் செக்கு’
மதுரை உயர்நீதிமன்ற கிளை வளாகத்தில் நூற்றாண்டுகள் பழமையான கல் செக்கு காணப்படுகிறது. இந்த கல்செக்கை ஆய்வுக்குட்படுத்தினால் பல்வேறு வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மதுரை: மதுரை உயர் நீதிமன்ற கிளை வளாகத்தில் நூற்றாண்டுகள் பழமையான கல் செக்கு காணப்படுகிறது. இந்த கல்செக்கை ஆய்வுக்குட்படுத்தினால் பல்வேறு வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கச்சிராயன்பட்டியில் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து பொறித்த கல்வெட்டு கொண்ட கல்செக்கு முன்பு கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் கேசம்பட்டி அய்யனார் கோயில் பகுதியில் கல் செக்கு இருந்ததும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான கல் செக்கின் உரல் பாகம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் தற்போது உள்ளது. இப்பகுதி ஏற்கெனவே ஏரியாக இருந்த பகுதி என்பதால் இங்கு பயன்பாடற்ற உரலைக் கொண்டு வந்து போட்டார்களா? அல்லது இப்பகுதியில் கல்செக்கு பயன்பாட்டில் இருந்ததா என்பதை விரிவான ஆய்வுக்கு பிறகே தெரிந்து கொள்ள முடியும்.
What's Your Reaction?