நீலகிரியில் கோடை மழையால் பசுந்தேயிலை வரத்து அதிகரிப்பு - தேயிலைத் தூள் உற்பத்தி தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் சமீப நாட்களாக பெய்த தொடர்‌ மழையால், பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

May 20, 2025 - 16:30
 0  3
நீலகிரியில் கோடை மழையால் பசுந்தேயிலை வரத்து அதிகரிப்பு - தேயிலைத் தூள் உற்பத்தி தீவிரம்

மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் சமீப நாட்களாக பெய்த தொடர்‌ மழையால், பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம்‌ பிரதான தொழிலாக உள்ளது. ஊட்டி, குன்னூர், மஞ்சூர்‌, பிக்கட்டி, கிண்‌ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார்‌, மேற்கு நாடு, நஞ்‌சநாடு உட்பட 15 கூட்டுறவு ஆலைகளும்,‌ ஏராளமான தனியார்‌ தொழிற்சாலைகளும்‌ இயங்கி வருகின்றன.

நடப்பாண்டு தொடக்கத்தில்‌ போதிய மழை பெய்யாததால்‌ வறட்சி ஏற்பட்‌டு, தேயிலை மகசூல்‌ பாதிக்‌கப்பட்டது. கூட்டுறவு மற்றும்‌ தனியார்‌ தேயிலை தொழிற்‌ சாலைகளில்‌ தேயிலைத் தூள்‌ உற்‌பத்தி பல மடங்கு குறைந்தது. தொழிலாளர் கூலி, மின் கட்டணம், உற்‌பத்திச் செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்‌ ஒரு சில தனியார்‌ தொழிற்‌சாலைகள்‌, தேயிலை உற்‌பத்தியை தற்காலிகமாக நிறுத்தின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow