‘2032-க்குள் கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை 22.8% வளர்ச்சியடையும்!’

வரும் 2032-ம் ஆண்டுக்குள் கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை   22.8 சதவீதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது என, நிதிஆயோக் உறுப்பினர்  டாக்டர் விஜய் குமார் சரஸ்வத் கூறியுள்ளார்.

Mar 17, 2025 - 17:45
 0  5
‘2032-க்குள் கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை 22.8% வளர்ச்சியடையும்!’

சென்னை: “வரும் 2032-ம் ஆண்டுக்குள் கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை 22.8 சதவீதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விஜய்குமார் சரஸ்வத் கூறியுள்ளார்.

சென்னையிலுள்ள தேசிய கடல்வளத் துறை தொழில்நுட்பக் கழகத்தில், ‘கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முன்னேற்றங்கள்’ எனும் தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கை, நிதி ஆயோக் உறுப்பினரும், பாதுகாப்புத் துறை விஞ்ஞானியுமான டாக்டர் விஜய்குமார் சரஸ்வத் இன்று (மார்ச் 17) தொடங்கி வைத்தார். இக்கருத்தரங்கில், இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்தும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow