புவிசார் குறியீடு பெற்ற தோவாளை மாணிக்க மாலைக்கு கூடும் மவுசு - பின்புலம் என்ன?
புவிசார் குறியீடு பெற்ற தோவாளை மாணிக்க மாலை 130 ஆண்டுகளுக்கு மேலாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி உற்சவரை அலங்கரித்து வரும் பெருமையை பெற்றுள்ளது.

நாகர்கோவில்: புவிசார் குறியீடு பெற்ற தோவாளை மாணிக்க மாலை 130 ஆண்டுகளுக்கு மேலாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி உற்சவரை அலங்கரித்து வரும் பெருமையை பெற்றுள்ளது. இதேபோல் முக்கிய கோயில் விழாக்களிலும், உலக தலைவர்களை வரவேற்பதிலும் மாணிக்க மாலைக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் நாளுக்கு நாள் இதன் மவுசு அதிகரித்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தயாராகும் கோயில் நகைகள், கிராம்பு, மார்த்தாண்டம் தேன், மட்டி வாழை போன்றவை புவிசார் குறியீடு பெற்றவை. தற்போது இங்குள்ள தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மலர் மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது இதுவே முதல்முறையாகும். திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்தே தோவாளையில் குடிசை தொழிலாக தொடுக்கப்படும் மாணிக்க மாலைகள்தான் அரசவை நிகழ்ச்சிகளிலும், இறைவன் சன்னதியில் முக்கிய விழாக்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
What's Your Reaction?