ரூ.1,120-க்கு மனைவிக்கு தாலி வாங்க சென்ற 93 வயது முதியவர் - நகைக் கடைக்காரர் தந்த ‘அன்பு பரிசு’
தள்ளாத வயதிலும் மனைவிக்காக தாலி வாங்க சென்ற 93 வயது முதியவர் இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறார். நகைக்கடைக்காரர் அன்புடன் ரூ.20 மட்டுமே கட்டணமாகப் பெற்றுக்கொண்ட வீடியோ பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா: தள்ளாத வயதிலும் மனைவிக்காக தாலி வாங்க சென்ற 93 வயது முதியவர் இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறார். நகைக் கடைக்காரர் அன்புடன் ரூ.20 மட்டுமே கட்டணமாகப் பெற்றுக்கொண்ட வீடியோ பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரைச் சேர்ந்த வெள்ளை நிற வேட்டி மற்றும் தொப்பி அணிந்த 93 வயதுடைய முதியவர் ஒருவர் தனது மனைவியுடன் 2 தினங்களுக்கு முன்பு ஒரு நகைக் கடைக்கு சென்றுள்ளார். இந்த தம்பதியின் பாசப் பிணைப்பாலும் பணிவான நடத்தையாலும் ஈர்க்கப்பட்ட நகைக் கடைக்காரர் அவர்களுடன் கணிவாக உரையாடி உள்ளார். அப்போது மனைவிக்கு தாலி செயின் வேண்டும் என முதியவர் கூறியுள்ளார். முதலில், கடை ஊழியர்கள் அந்த முதியவரும் அவரது மனைவியும் உதவி கேட்க அங்கு வந்ததாக நினைத்தனர்.
What's Your Reaction?