ஓடினாள்... ஓடினாள்... - பிழைப்புக்காக கும்பமேளா வந்த மோனாலிசாவை ‘துரத்திய’ சமூகம்!

"பெண்கள் தங்களைப் பற்றிய சமூக முன்முடிவுகளுக்கோ அல்லது சமூக கட்டமைப்புகளுக்கோ அஞ்சாமல் வாழக்கூடிய நிலையை உலகில் உருவாக்குவோம். நமக்காக, நம் பெண்களுக்காக, நம் சந்ததியினருக்காக நாம் இதனைச் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.” 

Jan 24, 2025 - 19:40
 0  2
ஓடினாள்... ஓடினாள்... - பிழைப்புக்காக கும்பமேளா வந்த மோனாலிசாவை ‘துரத்திய’ சமூகம்!

“கும்பமேளாவில் பாசி விற்ற மோனாலிசா என்ற இளம் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலானதைப் பார்த்தேன். இந்தியாவின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் வைரல் வீடியோக்களால் ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது சிலிர்ப்படையச் செய்தது. அதேவேளையில், நாளடைவில் அந்தப் பெண்ணை ஒரு போகப்பொருள் போன்று அனைவரும் அணுகிய விதமும், அவரைப் பலரும் சுற்றிவளைத்து நுணங்கி ஆராய்ந்ததும் வேதனையைத் தந்தது. நம் சமூகம் ஒரு பெண்ணை அவருடைய திறமைகள், தனித்துவம் ஆகியனவற்றை கொண்டு மதிப்பீடு செய்வதில்லை. மாறாக, அவரின் புறத்தோற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அவரை குறைமதிப்பிடுகிறது என்பது மனதை நொறுங்கச் செய்கிறது.

பெண்களின் புறத் தோற்றத்தை புறந்தள்ளிவிட்டு அவர்களின் சிந்தனைகள், உணர்வுகள், இலக்குகள் கொண்டு மதிப்பீடு செய்ய இச்சமூகம் பழகிக் கொள்ள வேண்டும் என்பதையே மோனாலிசாவை சுற்றிய நிகழ்வுகள் நிலைநிறுத்துகின்றன. நாம் கூட்டாக இணைந்து பெண்களுக்கு மரியாதை, அவர்கள் மீதான நேர்மறை சிந்தனை, அவர்களையும் உள்ளடக்கிய சமூகத்தை நிறுவதல் போன்றவற்றிற்கு குரல் கொடுப்போம். பெண்கள் தங்களைப் பற்றிய சமூக முன்முடிவுகளுக்கோ அல்லது சமூக கட்டமைப்புகளுக்கோ அஞ்சாமல் வாழக்கூடிய நிலையை உலகில் உருவாக்குவோம். நமக்காக, நம் பெண்களுக்காக, நம் சந்ததியினருக்காக நாம் இதனைச் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow