அமெரிக்காவில் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வழிநடத்திய தியான நிகழ்வு உலக சாதனை படைத்தது!

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அமெரிக்காவில் வழிநடத்திய ‘குருதேவுடன் உலகம் தியானிக்கிறது’ தியான நிகழ்வு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

Jan 2, 2025 - 15:50
 0  5
அமெரிக்காவில் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வழிநடத்திய தியான நிகழ்வு உலக சாதனை படைத்தது!

பெங்களூரு: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அமெரிக்காவில் வழிநடத்திய‘குருதேவுடன் உலகம் தியானிக்கிறது’ தியான நிகழ்வு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. உலக தியான நாளில், 8.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் தியானத்தில் பங்கேற்று இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வாழும் கலை அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘குருதேவுடன் உலகம் தியானிக்கிறது’ என்ற நிகழ்வு கின்னஸ் உலக சாதனை, ஆசிய புத்தக சாதனை மற்றும் உலக சாதனை சங்கத்தில் இடம்பிடித்து சாதனைகளின் பட்டியலில் இணைந்தது. ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வு, உலகம் முழுவதிலிருந்தும் மில்லியன் கணக்கான மக்களை ஒன்றிணைத்து, ஒருங்கிணைந்த தியானத்துக்கான புதிய அளவுகோலை உருவாக்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow