திருப்பதியை போன்று தர்மஸ்தலமும் வளர்ச்சி அடைய வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை
திருப்பதியை போன்று தர்மஸ்தலமும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின்பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை வழங்கியுள்ளார்.

சென்னை: திருப்பதியை போன்று தர்மஸ்தலமும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின்பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை வழங்கியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக விஜய யாத்திரையில் இருக்கும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 9-ம் தேதி தர்மஸ்தலத்துக்கு விஜயம் செய்தார். அப்போது அவருக்கு தர்மஸ்தலத்தின் தர்மாதிகாரி ஸ்ரீ வீரேந்திர ஹெக்டே தலைமையிலான நிர்வாகிகள் தர்மஸ்தலத்தின் நுழைவாயிலில் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
What's Your Reaction?