கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள கதிராமங்கலத்தில் உள்ளது வனதுர்க்கை அம்மன் கோயில். தமிழக அளவில் வனதுர்க்கையம்மன் மூலவராக அருள் பாலிப்பது இங்கு மட்டுமே.

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள கதிராமங்கலத்தில் உள்ளது வனதுர்க்கை அம்மன் கோயில். தமிழக அளவில் வனதுர்க்கையம்மன் மூலவராக அருள் பாலிப்பது இங்கு மட்டுமே. சிறப்பு பெற்ற இந்த வனதுர்க்கை அம்மன், நவதுர்க்கை அம்மன் கோயில்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்களுக்கு தொடர்ந்து எல்லையில்லா துன்பங்களை தந்த அசுரர்களை அழிக்கவும், இடைவிடாது பூஜித்த மும்மூர்த்திகளின் துன்பங்களை போக்கவும், ஆதிபராசக்தி இளம்பெண் ணாகத் தோன்றி துர்க்கையின் அம்சத்தைப் பெற்று அசுரர்களை அழித்தார். அவரே இங்கு வனதுர்க்கையாக காட்சியளிக்கிறார்.
What's Your Reaction?