சபரிமலை தரிசனத்துக்கான முன்பதிவுகள் தீவிரம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 16-ம் தேதி நடை திறக்கப்படுவதையொட்டி தரிசனத்துக்காக பக்தர்கள் ஆன்லைனில் மும்முரமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 16-ம் தேதி நடை திறக்கப்படுவதையொட்டி தரிசனத்துக்காக பக்தர்கள் ஆன்லைனில் மும்முரமாக முன்பதிவு செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி பூஜைக்காக கடந்த 29-ம் தேதி நடை திறக்கப்பட்டது. பின்பு 30-ம் தேதி ஒரு நாள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இதில் புதிய நெற்கதிர்கள் ஆபரணப்பெட்டியில் வைத்து தலைச்சுமையாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்பு அவை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டு நடை சாத்தப்பட்டது.
What's Your Reaction?