2024 டிசம்பரில் யுபிஐ பரிவர்த்தனைகள் எண்ணிக்கை 16.73 பில்லியனை தொட்டு சாதனை
ஒவ்வொரு மாதமும் சராசரியாக 8 சதவீதம் அதிகரித்து வரும் யுனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலமான பரிவர்த்தனை டிசம்பர் மாதத்தில் 16.73 பில்லியன் எட்டி சாதனை படைத்துள்ளது என்று தேசிய கட்டணக் கழகத்தின் (NPCI) தரவுகள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி: அதிகரித்து வரும் யுபிஐ பரிவரத்தனை போக்கு டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்தது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 8 சதவீதம் அதிகரித்து வரும் யுனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலமான பரிவர்த்தனை டிசம்பர் மாதத்தில் 16.73 பில்லியன் எட்டி சாதனை படைத்துள்ளது என்று தேசிய கட்டணக் கழகத்தின் (NPCI) தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த நவம்பர் மாதத்தில் யுபிஐ மூலமான பரிவர்த்தனை எண்ணிக்கை 15.48 பில்லியனாக இருந்தது. அதேபோல், கடந்த நவம்பரில் ரூ.21.55 லட்சம் கோடியாக இருந்த யுபிஐ மூலமான பணபரிவர்த்தனையின் மதிப்பு 8 சதவீதம் உயர்ந்து டிசம்பரில் ரூ.23.25 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் 2024 ஆண்டுக்கான யுபிஐ பரிவர்த்தனை 46 சதவீதம் உயர்ந்து 172 பில்லியனாக இருந்ததது. கடந்த 2023-ம் ஆண்டு இது 118 பில்லியனாக இருந்தது.
What's Your Reaction?