ராணுவத்தில் அதிகாரியாகத் தயாரா? | இதோ வேலை
வாழ்க்கையில் லட்சிய இலக்கை நிர்ணயித்துச் சிகரத்தை அடைய வழிதேடும் இளைய தலைமுறையினர், சிறிய எல்லைக் கோட்டை வரைந்து அந்த வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

வாழ்க்கையில் லட்சிய இலக்கை நிர்ணயித்துச் சிகரத்தை அடைய வழிதேடும் இளைய தலைமுறையினர், சிறிய எல்லைக் கோட்டை வரைந்து அந்த வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இன்றைய வேலைவாய்ப்பு உலகம் வானளாவிய வாய்ப்புகளுடன் உரிய திறன் பெற்றவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அல்லது தமிழக எல்லைக்குள் வேலை தேடும் மனநிலையிலேயே பெரும்பாலான மாணவர்கள் உள்ளனர். இவர்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எழுதுவதில் தயக்கம் காட்டுகின்றனர். தமிழ்நாடு அரசின் குரூப்-4 தேர்வுகளில் சுமார் எட்டாயிரம் பணியிடங்களுக்கு 20 லட்சத்துக்கு மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். எனவே, தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளின் மூலம் வேலைவாய்ப்பைப் பெற மாணவர்கள் முயலலாம்.
What's Your Reaction?