எண்ணெய்யால் ஒளிரும் வாழ்க்கை | வாழ்ந்து காட்டுவோம்

என் பெயர் மோகனப்பிரியா. நான் சேலம் மாவட்டம் குரால்நத்தம் ஊராட்சியில் வசிக்கிறேன். எங்கள் ஊராட்சியில் 1227 குடும்பங்களும் 9 குடியிருப்புகளும் உள்ளன.

Feb 16, 2025 - 14:45
 0  3
எண்ணெய்யால் ஒளிரும் வாழ்க்கை | வாழ்ந்து காட்டுவோம்

என் பெயர் மோகனப்பிரியா. நான் சேலம் மாவட்டம் குரால்நத்தம் ஊராட்சியில் வசிக்கிறேன். எங்கள் ஊராட்சியில் 1227 குடும்பங்களும் 9 குடியிருப்புகளும் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் மலைவாழ் இன பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாயத் தொழில் புரிபவர்கள். இங்கு ராகி, திணை, நிலக்கடலை, சோளம், அரளி போன்றவற்றைப் பயிரிடுகின்றனர்.

குரால்நத்தம் ஊராட்சியில் உள்ள மலைவாழ் இன பழங்குடிப் பெண்கள் என்னுடன் சேர்த்து 100 நபர்கள் உற்பத்தியாளர் குழுவைத் தொடங்கினோம். உற்பத்தியாளர் குழுவுக்கு முதல்கட்டமாக ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்திலிருந்து ரூ. 75,000 தொடக்க நிதி வந்தது. இத்தொகையைக் கொண்டு ரோட்டோவேட்டர் இயந்திரம் வாங்கி தேவையான உறுப்பினர்களுக்கு அதை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டிவந்தோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow