ஸ்விஸ் எனும் சொர்க்கம் 19: சுத்திகரிக்கப்படாத கலை!

நான்கு விதமான அரக்க உருவங்கள்.  அவற்றில் ஒரு காமிக்ஸ் தன்மையும் அழகாகத் தெரிந்தது விதவிதமான வண்ண மீன்கள் சிற்பங்களாகக் காணப்படுகின்றன

Nov 12, 2024 - 16:05
 0  12
ஸ்விஸ் எனும் சொர்க்கம் 19: சுத்திகரிக்கப்படாத கலை!

'ஆர்ட் ப்ரூட்’ அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற வித்தியாசமான கலைப்படைப்புகளைப் படைத்தவர்களில் சிலர்.
அமெரிக்காவில் பிறந்தவர் ஜார்ஜஸ் வைடனர். அப்பா சிறுவயதில் இருந்துவிட, அம்மா மது நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். வைடனர் கணிதத்திலும் ஓவியத்திலும் தன் பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அற்புதமான நினைவாற்றல் கொண்டவர். அமெரிக்க விமானப்படையில் ஒரு தொழில்நுட்ப ஊழியராகச் சேர்ந்தார். பின்னர் மனநிலை சரியில்லாமல் போக, அதற்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றும் ஓவியங்கள், காலண்டர்கள் ஆகிய வடிவங்களில் அவரது கலைப்படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அடால்ஃப் வோல்ஃபி சுவிட்சர்லாந்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்டவர். விவசாயக் குடும்பமொன்றில் வளர்ந்தவர். பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொண்டதற்காகச் சிறைப்படுத்தப்பட்டார். சிறையிலிருந்து வெளி வந்த உடனே மீண்டும் இந்தத் தவறைச் செய்யவே, அவர் மனநலம் குன்றியவராகக் கருதப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறக்கும் வரை அங்கேயே இருந்தார். தனது 35 வயதிலேயே ஓவியம் தீட்டுவது, இசைக்கோவையை உருவாக்குவது போன்றவற்றைத் தொடங்கிவிட்டார். இணையொட்டுப் படங்கள் (கொலாஜஸ்) என்கிற முறை இவருக்கு மிகவும் பிடித்தது. இவரது ஓவியங்களில் கண்களைச் சுற்றிலும் ஒரு கவசமும் அதில் இசைக் குறிப்புகளும் காணப்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow