AUS vs IND முதல் டெஸ்ட்: பெர்த் போட்டியில் ஆடும் லெவனில் படிக்கல், ஜுரெல்?

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் பந்துகள் எகிறும் பெர்த் ஆப்டஸ் மைதான ஆடுகளத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நாளை மறுநாள் (நவ.22) ஆடுகின்றன.

Nov 20, 2024 - 14:20
 0  6
AUS vs IND முதல் டெஸ்ட்: பெர்த் போட்டியில் ஆடும் லெவனில் படிக்கல், ஜுரெல்?

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் பந்துகள் எகிறும் பெர்த் ஆப்டஸ் மைதான ஆடுகளத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நாளை மறுநாள் (நவ.22) ஆடுகின்றன. இந்த போட்டிக்கான இந்திய லெவன் என்னவென்பது அனைவருக்கும் ஆர்வத்தைக் கிளப்பக் கூடிய ஒன்று.

ஏனெனில், இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா இல்லாததால் கே.எல்.ராகுல் மீண்டும் தொடக்க வீரர் இடத்துக்கு முன்னேற்றப்படுகிறார். ராகுல், ஜெய்ஸ்வால் தொடங்க அடுத்த 3-ம் நிலையில் ஆடும் ஷுப்மன் கில்லும் காயம் காரணமாக இல்லாததால் தேவ்தத் படிக்கல் அந்த இடத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6-ம் நிலையில் விக்கெட் கீப்பர் ஜுரெல் இறங்குவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சர்பராஸ் கானுக்கு வாய்ப்பளிக்கப் படமாட்டாது என்று தெரிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow