‘‘விமர்சனம் என்ற பெயரில் தனிமனித தாக்குதல்’’ - யூடியூப் சேனல்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்

திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீதான வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

Nov 20, 2024 - 14:45
 0  5
‘‘விமர்சனம் என்ற பெயரில் தனிமனித தாக்குதல்’’ - யூடியூப் சேனல்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்

சென்னை: “திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீதான வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த யூடியூப் சேனல்களும் எடுக்க தடை விதித்து, இந்த FDFS பப்ளிக் ரெவியு நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டும்,” தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருகின்றன. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow