நவ கோபுரங்கள் கொண்ட நவ துவாரபுரி - திருவண்ணாமலை | கார்த்திகை தீபம் சிறப்பு

‘உடலுக்கு ஒன்பது வாசல் - மனதுக்கு எண்பது வாசல்’ என்று பாடுகிறார் கவிஞர் கண்ணதாசன். மனித உடலில் கண்ணுக்குத் தெரிந்து ஒன்பது துவாரங்கள் உள்ளன.

Dec 13, 2024 - 15:50
 0  4
நவ கோபுரங்கள் கொண்ட நவ துவாரபுரி - திருவண்ணாமலை | கார்த்திகை தீபம் சிறப்பு

‘உடலுக்கு ஒன்பது வாசல் - மனதுக்கு எண்பது வாசல்’ என்று பாடுகிறார் கவிஞர் கண்ணதாசன். மனித உடலில் கண்ணுக்குத் தெரிந்து ஒன்பது துவாரங்கள் உள்ளன. ஒன்பது துவாரங்கள் இருந்தும் உள்ளே உயிர் பிராணன் என்ற வடிவில் வாயுவாக வெளியேறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது எப்படி என்பது அறிவியலே வியக்கும் உண்மை.

திருவண்ணாமலையை வந்து அடைய ஒன்பது சாலைகள் உள்ளன. திருவண்ணாமலையின் மையமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலிலும் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. இதனால், திருவண்ணாமலை மனித உடலின் ஜடத்துவ வடிவம் என்று ஆன்மீகவாதிகள் கருதுகின்றனர். அண்ணாமலையார் ஆலயமே ஜீவாத்மாவின் குறியீடு என்பது சித்தர்கள் கருத்து. இதன் காரணமாகவே இத்தளத்துக்கு ‘நவ துவாரபுரி’ என்ற பெயர் உண்டு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow