ஒரு மரணமும் அதன் மர்மமும்! - எமகாதகி திரைப் பார்வை

‘எமகாதகி’, ஆணவக் கொலை வழியாக வலிந்து சிறுதெய்வம் ஆக்கப்பட்ட பெண் களின் விடுதலைக் குரலையும் அது நெரிக்கப்பட்ட அவர்களின் குமுறலையும் கலை நேர்த்தியுடன் ஓங்கி ஒலித்திருக்கிறது.

Mar 7, 2025 - 13:50
 0  4
ஒரு மரணமும் அதன் மர்மமும்! - எமகாதகி திரைப் பார்வை

நாட்டார் தெய்வங்கள் குறித்துத் தமிழ் சினிமாவில் இதுவரை அதிகமும் காட்டப்பட்ட அம்சங்கள் கிராமியக் கோயில் திருவிழாக்கள், சாமியாடிகள் பற்றி மட்டுமே. ஆனால், ‘எமகாதகி’, ஆணவக் கொலை வழியாக வலிந்து சிறுதெய்வம் ஆக்கப்பட்ட பெண் களின் விடுதலைக் குரலையும் அது நெரிக்கப்பட்ட அவர்களின் குமுறலையும் கலை நேர்த்தியுடன் ஓங்கி ஒலித்திருக்கிறது.

தஞ்சையின் வளமை மிகுந்த கிராமம் ஒன்றின் தலைவர் செல்வராஜ். கல்லூரிப் படிப்பை முடித்த அவருடைய மகள் லீலா, ஒரு நாள் இரவு சடலமாகத் தூக்கில் தொங்குகிறாள். ஆஸ்துமா பிரச்சி னையால் அவ்வப்போது அவதிப்படும் அவள், மூச்சுவிட முடியாமல் இறந்துவிட்டதாக ஊரை நம்பவைக்கும் குடும்பம், அவளது இறுதிச் சடங்கை முடித்துவிட முயல்கிறது. சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல லீலாவின் சடலத்தைத் தூக்க முயலும் போது அது சாத்தியமில் லாமல் போகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow