ஸிக்கி: குழந்தைகளால் மீண்ட யானை! | வரலாறு முக்கியம் மக்களே! - 13
தனது ஆறு வயது மகள் பேட்ரீசியாவுக்குப் பிறந்த நாள் பரிசாக என்ன கொடுக்கலாம் என்று யோசித்தார் ஃப்ளோரென்ஸ் ஸிக்ஃபீல்ட். அமெரிக்காவின் புகழ்பெற்ற பிராட்வே தியேட்டரைச் சேர்ந்த கலைஞர்.

தனது ஆறு வயது மகள் பேட்ரீசியாவுக்குப் பிறந்த நாள் பரிசாக என்ன கொடுக்கலாம் என்று யோசித்தார் ஃப்ளோரென்ஸ் ஸிக்ஃபீல்ட். அமெரிக்காவின் புகழ்பெற்ற பிராட்வே தியேட்டரைச் சேர்ந்த கலைஞர். எதையும் பெரிதாக யோசித்தே பழக்கப்பட்டவர். தன் மகள் வாழ்நாளுக்கும் மறக்கவே முடியாதபடி ஒரு பரிசை வழங்க நினைத்தார். ஆகவே, ஜான் ரிங்லிங் என்கிற சர்க்கஸ் கலைஞரிடமிருந்து யானைக்குட்டி ஒன்றை வாங்கினார்.
அந்தப் பரிசு வந்து இறங்கியபோது, பேட்ரீசியா வாய்பிளந்து நின்றாள். 1912ஆம் ஆண்டில் பிறந்த அந்த இந்திய ஆண் யானைக்கு ‘ஸிக்கி’ (Ziggy) என்று பெயரிட்டார் ஸிக்ஃபீல்ட். ஆனால், ஸிக்கியை அவர்களுக்குப் பராமரிக்கத் தெரியவில்லை. ஸிக்கி அவர்கள் வீட்டுத் தோட்டத்தை நாசம் செய்ய, அதனை மீண்டும் ரிங்லிங் சர்க்கஸுக்கே அனுப்பி வைத்தார்.
What's Your Reaction?