பறவைகள் V வடிவில் பறப்பது ஏன்? | பறப்பதுவே 26
வலசையின்போது மொத்தக் கூட்டத்தையும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மாற்றுகிறது தலைமைப் பறவை. செல்லும் வேகத்துக்கு ஏற்பகாற்றிலிருந்து ஏற்படும் உராய்வு விசையும் அதிகரிக்கிறது.

தொலைதூரத்துக்கு வலசை மேற்கொள்ளும் பறவைகள் பொதுவாகக் கூட்டமாகத்தான் செல்கின்றன. வலசையின்போது மொத்தக் கூட்டத்தையும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மாற்றுகிறது தலைமைப் பறவை. செல்லும் வேகத்துக்கு ஏற்பகாற்றிலிருந்து ஏற்படும் உராய்வு விசையும் அதிகரிக்கிறது.
இந்த உராய்வு விசையைக் குறைப்பதற்குக் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் கூர்மையான பகுதி தேவைப்படுகிறது. வல்லூறு மணிக்கு 80 கி.மீ. வேகத்திலும், புறா மணிக்கு 50 கி.மீ. வேகத்திலும் பறக்கும்போது தங்களது இறக்கையை, சாதாரண நீளத்தில் வைத்திருப்பதைவிடச் சிறிது நீளம் குறைந்த மாதிரி இருக்குமாறு வைத்துக்கொண்டு பறக்கின்றன.
What's Your Reaction?