மீண்டும் இந்திய கால்பந்து அணிக்காக விளையாடும் சுனில் சேத்ரி! 

சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து கடந்த ஆண்டு சுனில் சேத்ரி ஓய்வு பெற்றார். 

Mar 7, 2025 - 12:45
 0  5
மீண்டும் இந்திய கால்பந்து அணிக்காக விளையாடும் சுனில் சேத்ரி! 

சென்னை: இந்திய கால்பந்து அணிக்காக மீண்டும் களம் காண உள்ளார் சுனில் சேத்ரி. இதற்காக அவர் ஓய்வுக்கு விடை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் குவைத் உடனான போட்டிக்கு பிறகு அவர் ஓய்வு பெற்றார்.

இந்திய கால்பந்து அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (151 போட்டிகள்) மற்றும் அதிக கோல்கள் (94 கோல்கள்) பதிவு செய்த வீரராக சுனில் சேத்ரி திகழ்கிறார். 40 வயதான அவர், கடந்த 2005-ல் இந்திய சீனியர் கால்பந்து அணியில் விளையாடத் தொடங்கினார். இந்தச் சூழலில் சர்வதேச போட்டிகளில் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்தார். தற்போது அதற்கு விடை கொடுத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow