‘குகேஷை வேண்டுமென்றே வெற்றி பெற வைத்தார்’ - டிங் லிரென் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்று ஆட்டத்தின் போது சீனாவின் டிங் லிரென் செய்த தவறு அவரது தரத்திலான வீரருக்கு மிகவும் வேடிக்கையானது என ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலடோவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார். 

Dec 13, 2024 - 15:55
 0  4
‘குகேஷை வேண்டுமென்றே வெற்றி பெற வைத்தார்’ - டிங் லிரென் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோ: உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்று ஆட்டத்தின் போது சீனாவின் டிங் லிரென் செய்த தவறு அவரது தரத்திலான வீரருக்கு மிகவும் வேடிக்கையானது என ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலடோவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

18-வது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 18 வயது இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரெனுடனான இந்தப் போட்டியில் கடைசி சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றார். இந்நிலையில், டிங் லிரென் மீது ஆண்ட்ரே ஃபிலடோவ் குற்றம் சுமத்தியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow