கடுகு வெடிப்பது ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்
காய்ந்த கடுகாகத் தெரிந்தாலும் கடுகுக்குள் நீர்ச் சத்து இருக்கிறது. அதைச் சூடான எண்ணெயிலோ பாத்திரத்திலோ போடும்போது, கடுகில் உள்ள நீர் வெப்பத்தால் ஆவியாகி, கடுகை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது.

எண்ணெயில் போட்டவுடன் கடுகு வெடிக்கிறதே, என்ன காரணம் டிங்கு? - கே. ஸ்ரீநிதி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
காய்ந்த கடுகாகத் தெரிந்தாலும் கடுகுக்குள் நீர்ச் சத்து இருக்கிறது. அதைச் சூடான எண்ணெயிலோ பாத்திரத்திலோ போடும்போது, கடுகில் உள்ள நீர் வெப்பத்தால் ஆவியாகி, கடுகை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது. அப்போதுதான் கடுகிலிருந்து வெடிக்கும் சத்தம் வருகிறது. சோளத்தை இப்படிச் சூடேற்றும்போதும் அதிலிருக்கும் நீர் ஆவியாக வெளியேறி, பாப்கார்னாக மாறுகிறது. அப்பளத்திலும் ஈரம் இருப்பதால்தான் பொரிகிறது, ஸ்ரீநிதி.
What's Your Reaction?