வெல்லுங்கள் CSAT 2025 - 1: தேர்வுக்குத் தயாரா?

வினாக்களுக்கான விடைகளை விரிவான விளக்கங்களுடன் சுலபமாக புரியும் வகையில் ஆங்கிலத்திலும் கொடுக்கப்படும். நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

Feb 27, 2025 - 19:45
 0  7
வெல்லுங்கள் CSAT 2025 - 1: தேர்வுக்குத் தயாரா?

குடிமைப் பணி (IAS, IPS, IRS, IFS etc.,) பொதுத் தேர்வை வருடந்தோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தி வருகிறது. பொது முதல்நிலை தேர்வில் (Preliminary) இரு தாள்கள் (GS 1, CSAT) உள்ளன. ஒவ்வொரு தாளும் 200 மதிப்பெண்கள் உடையது. வினாத்தாள்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் இருக்கும். அனைத்து கேள்விகளும் கொள்குறி வினா-விடை வகையைச் சார்ந்தவை.

GS 1இல் 100 வினாக்களும் (ஒவ்வொரு வினாவுக்கும் மதிப்பெண் 2) CSATஇல் 80 வினாக்களும் (ஒவ்வொரு வினாவுக்கும் மதிப்பெண் 2.5) தொகுக்கப்பட்டிருக்கும். தவறான விடை ஒவ்வொன்றிற்கும் அவ்வினாவிற்கான மதிப்பெண்ணின் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்படும். விடையளிக்காத வினாவிற்கு மதிப்பெண் வழங்கப்படமாட்டாது. தகுதிக்கான CSAT தாளில் குறைந்தபட்சம் 33% மதிப்பெண் பெற்றிருந்தால்தான் GS 1 தாளை மதிப்பீடு செய்வர். CSAT தேர்வில் கணிதம், நுண்ணறிவு சேர்ந்த வினாக்கள் சற்று கடினமாக தோன்றினாலும் எளிய முறைகளுடன் நன்கு பயிற்சி செய்து தகுதித்தேர்வை எதிர்கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்று முதன்மைத் தேர்வு எழுதி கண்டிப்பாகத் தகுதி பெற இயலும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow