ஒரு பாசுரத்தில் மூன்று பாச்சரங்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 10
ஒன்பது பாசுரங்களைப் பாடியும் கண் மலராத பெருமாளின் மீது, தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு ஒரு மெல்லிய கோபம் ஏற்படுகிறது.

ஒன்பது பாசுரங்களைப் பாடியும் கண் மலராத பெருமாளின் மீது, தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு ஒரு மெல்லிய கோபம் ஏற்படுகிறது. அதனால் தன் சொல் ஒவ்வொன்றையும் கூர் தீட்டுகிறார். திருப்பள்ளியெழுச்சியின் நிறைவுப் பாசுரமான பத்தாம் பாசுரம் அவரிடமிருந்து பிறக்கிறது.
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித்
துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி யென்னும்
அடியனை அளியனென் றருளியுன் னடியார்க்
காட்படுத் தாய்பள்ளி எழுந்தரு ளாயே
“சூரியன் உச்சிக்கு வந்து நிலைகொண்டுவிட்டான். மணம் மிகுந்த தாமரைப்பூக்கள் மலர்ந்துவிட்டன” என்று முதலிரண்டு அடிகள் சொல்கின்றன. ஆனால், கிட்டத்தட்ட இதே கருத்தை முதல் பாசுரத்திலேயே தொண்டரடிப்பொடியார் சொல்லிவிடுகிறார்.
What's Your Reaction?