புதனைவிட வெள்ளி ஏன் அதிக வெப்பமாக இருக்கிறது? | டிங்குவிடம் கேளுங்கள்
சூரியக் குடும்பத்தின் இரண்டாவது கோள் வெள்ளி. இந்தக் கோளின் வளிமண்டலம் அடர்த்தியானது. இந்த வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயு அதிகமாக இருக்கிறது.

சூரியனுக்கு மிக அருகில் புதன் கோள் இருந்தாலும் மிக வெப்பமான கோள் வெள்ளி என்கிறார்களே, ஏன் டிங்கு? - த. தன்யா, 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
சூரியக் குடும்பத்தின் இரண்டாவது கோள் வெள்ளி. இந்தக் கோளின் வளிமண்டலம் அடர்த்தியானது. இந்த வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயு அதிகமாக இருக்கிறது. வெள்ளிக் கோளின் மேகங்கள் கந்தக அமிலத்தால் ஆனவை. எனவே வெள்ளிக் கோளில் இருந்து வெளியேறும் வெப்பத்தை ஈர்த்து வைத்துக்கொள்கின்றன.
What's Your Reaction?