செவ்வாய் ஏன் சிவப்பு நிறத்தில் உள்ளது? | வானம் நமக்கொரு போதிமரம் 6
செவ்வாய்க் கோளின் தரைப்பரப்பு முழுவதும் இரும்பு ஆக்சைடு நிரம்பியுள்ளது. இரும்பு அணு ஆக்சிஜனேற்றம் அடையும்போது இரும்பு ஆக்சைடாக மாறுகிறது. இதைத்தான் நாம் துரு என்கிறோம். அதாவது, செவ்வாய்க் கோள் முழுவதும் ‘துரு’ப் பிடித்துள்ளது என்று சொல்லலாம்.

செவ்வாய்க் கோளின் தரைப்பரப்பு முழுவதும் இரும்பு ஆக்சைடு நிரம்பியுள்ளது. இரும்பு அணு ஆக்சிஜனேற்றம் அடையும்போது இரும்பு ஆக்சைடாக மாறுகிறது. இதைத்தான் நாம் துரு என்கிறோம். அதாவது, செவ்வாய்க் கோள் முழுவதும் ‘துரு’ப் பிடித்துள்ளது என்று சொல்லலாம். செவ்வாய்க் கோளின் மண் கணிசமான அளவில் நொறுங்கி உடைந்து நுண்தூசியாக மாறியுள்ளது. இந்தத் தூசியும் செவ்வாயின் மெல்லிய வளிமண்டலத்தில் மிதந்தபடி இருக்கும். இந்தக் காரணங்களால்தான் அந்தக் கோள் பார்வைக்குச் சிவப்பு நிறத்தில் காட்சி தருகிறது.
மற்ற கோள்களில் நிலைமை எப்படி? - பழுப்பு, சிவப்பு, மஞ்சள், கறுப்பு, சாம்பல், வெள்ளை, நீலம், பச்சை எனப் பல்வேறு நிறங்களில் பூமியில் மண் உள்ளது. மண்ணில் உள்ள ஈரப்பசை, வானிலை, உயிரியல் இயக்கம் முதலியவை ஏற்படுத்தும் வேதி வினைகளின் காரணமாகத்தான் பூமியின் மண் பல வண்ணங்களில் காணப்படுகிறது. உயிரிகள் வெளியிடும் கரிமப் பொருள்களும் பாறைகளில் உள்ள இரும்பு, மாங்கனீசு போன்ற பல்வேறு தாதுப்பொருள்களும், மண்ணின் ஈரப்பசை மற்றும் வளிமண்டலத்துடன் வேதிவினை புரிகின்றன.
What's Your Reaction?