ஸ்விஸ் எனும் சொர்க்கம் 18: வித்தியாசமான ‘ஆர்ட் ப்ரூட்’ அருங்காட்சியகம்
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள படைப்புகளை உருவாக்கியவர்கள் யாரிடமும் கலையைக் கற்றுக் கொள்ளாதவர்கள். யாருடைய அங்கீகாரத்தையும் பெற வேண்டும் என்று எண்ணம் கொள்ளாதவர்கள்.

திராட்சைத் தோட்டங்களை 'வின்யார்ட்ஸ்' (vineyards) என்கிறார்கள். ஆல்ப்ஸ் மலையில் இந்தத் திராட்சைக் கொடிகள் படர்ந்திருக்கும் அழகே அழகு. பெரும்பாலான திராட்சைகள் மது தயாரிப்பதற்காகப் பயிரிடப்படுகின்றன. என்றாலும் திராட்சை பழச்சாறு, உலர்ந்த திராட்சை போன்றவற்றுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
நாங்கள் தங்கியிருந்த லொசான் பகுதியை 'கிரேட் வைன் தலைநகரம்’ என்பார்கள். அதாவது அதிக அளவில் திராட்சைத் தோட்டங்கள் இங்கு காணப்படுகின்றன. நமது தேயிலைத் தோட்டங்கள் போலவே, திராட்சைத் தோட்டங்களும் மலைப்பகுதிகளில் அமைந்திருக்கின்றன. எனவே அவை படிகளில் அமைந்திருப்பதுபோல் காட்சியளிக்கின்றன. இந்தத் திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவே, அதாவது இருபுறமும் வேலியிடப்பட்ட திராட்சைத் தாவரங்களுக்கு நடுவே உள்ள பாதைகளில் நடப்பது வெகு சுகம். சில திராட்சைத் தோட்டங்களில் இரவு தங்குவதற்கும் அனுமதிக்கிறார்கள். இவை பெரும்பாலும் ஏரிக்கரை ஓரமாகவே அமைந்துள்ளன என்பதால் அழகுக்கு அழகு சேர்கிறது.
What's Your Reaction?