ஒளியில் இத்தனை வகைகளா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 8
தன்னை வைத்து திருமால் ஏதோ திருவிளையாடல் செய்கிறார் என்று மட்டும் தான் தொண்டரடிப் பொடியாழ்வாருக்குத் தெரிகிறது. ஆனால், திருமாலின் திருவுளம் என்ன என்பதை திருமால் அன்றி வேறு யார் அறிய முடியும் ? அதனால் தொண்டரடிப்பொடியாருக்கு வேறு வழியில்லை.

தன்னை வைத்து திருமால் ஏதோ திருவிளையாடல் செய்கிறார் என்று மட்டும் தான் தொண்டரடிப் பொடியாழ்வாருக்குத் தெரிகிறது. ஆனால், திருமாலின் திருவுளம் என்ன என்பதை திருமால் அன்றி வேறு யார் அறிய முடியும் ? அதனால் தொண்டரடிப்பொடியாருக்கு வேறு வழியில்லை. அவர் தொடர்ந்து பாடுகிறார்.
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ
பாயிரு ளகன்றது பைம்பொழில் கமுகின்
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ
அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா பள்ளியெழுந் தருளாயே
What's Your Reaction?