எது எனக்கான புத்தகம்? | தேன் மிட்டாய் 26
எனக்குப் பெரிதாக அரசியல், அறிவியல், வரலாறு, இலக்கியம் எல்லாம் தெரியாதே. என்ன செய்யலாம் பிரான்சிஸ் பேகன்? கொஞ்சம் வழிகாட்டுங்களேன்.

எனக்குப் புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆசை. பாடப் புத்தகம் கடந்து இதுவரை எதையும் படித்ததில்லை. நான் எங்கே தொடங்க வேண்டும்? எந்த மாதிரியான புத்தகம் எனக்கு ஏற்றதாக இருக்கும்? கதை படிக்கலாமா அல்லது நல்ல கருத்துகளோடு இருக்கும் பெரிய, பெரிய புத்தகங்களைத்தான் படிக்க வேண்டுமா? அவற்றை எல்லாம் படித்தால் எனக்குப் புரியுமா? பெரிய, பெரிய புத்தகங்களை எல்லாம் பார்த்தால் பயமாக இருக்கிறது.
எனக்குப் பெரிதாக அரசியல், அறிவியல், வரலாறு, இலக்கியம் எல்லாம் தெரியாதே. என்ன செய்யலாம் பிரான்சிஸ் பேகன்? கொஞ்சம் வழிகாட்டுங்களேன். பள்ளி மாணவர்கள் தொடங்கி பலரும் கேட்கும் இந்தக் கேள்விகளுக்குப் புன்னகையோடு நான் அளிக்கும் ஒரே பதில். வாழ்த்துகள்!
What's Your Reaction?