ஏற்றம் பெறுமா மண் பானை தயாரிப்பு தொழில்?
கடந்த 1980-க்கு முன்பு மற்றும் அதற்கடுத்த சில ஆண்டு கால கட்டங்களில், பானை, அடுப்பு என மண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்களின் பயன்பாடு பொதுமக்களிடம் அதிகளவில் இருந்தது.

கடந்த 1980-க்கு முன்பு மற்றும் அதற்கடுத்த சில ஆண்டு கால கட்டங்களில், பானை, அடுப்பு என மண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்களின் பயன்பாடு பொதுமக்களிடம் அதிகளவில் இருந்தது. சாதம் சமைப்பதில் தொடங்கி, குழம்பு, ரசம் ஊற்றி வைக்கவும், தண்ணீர் சேகரித்து வைக்கவும், முக்கிய பொருட்களை போட்டு பாதுகாத்து வைக்கவும் மண்பாண்டங்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்தன.
குடிசை வீடு தொடங்கி மாடி வீடு வரையிலும் பல வித தேவைகளுக்காக மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர், காலப் போக்கில் பாதுகாப்பு இல்லாதது, எளிதில் உடைந்து விடும் தன்மை போன்ற வற்றாலும், கெட்டித் தன்மையுடன் அதிக காலம் உழைக்கும் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதாலும் 1980 களின் இறுதியில் இருந்து மண்பாண்டங்களின் பயன்பாடு மக்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின.
What's Your Reaction?