உன்னால் முடியும்: ஆனால் எப்போது?
பெற்றோர்களுக்கோ எந்தக் கல்லூரியில், எந்தப் பாடப் பிரிவை எடுத்துப் படிக்க வைப்பது என்கிற எதிர்பார்ப்பு இன்னொரு பக்கம். இதில் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் பற்றி எந்தக் கவலையும் வேண்டாம்.

இது பொதுத் தேர்வுக் காலம். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்கிற மாணவர்களின் முனைப்பு ஒரு பக்கம். பெற்றோர்களுக்கோ எந்தக் கல்லூரியில், எந்தப் பாடப் பிரிவை எடுத்துப் படிக்க வைப்பது என்கிற எதிர்பார்ப்பு இன்னொரு பக்கம். இதில் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் பற்றி எந்தக் கவலையும் வேண்டாம். ஆனால், மிகவும் குறைவான மதிப்பெண்கள் பெறுபவர்களின் நிலை? பெரும்பாலும் 70 - 80 சதவீத மதிப்பெண்கள் எடுப்பவர்களே அதிகம்.
இவர்களுக்கு விருப்பப்பட்ட கல்லூரியில் விரும்பும் பாடப்பிரிவு கிடைப்பது பெரிய சவால். ஒரு கல்லூரில் இடம் கிடைப்பதில் நிர்வாக ஒதுக்கீடு, சுயநிதிக் கல்லூரி, கலந்தாய்வு, முதல் பட்டதாரி என்று பல அம்சங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டிதான் நல்ல கல்லூரியில் ஓரிடத்தை வாங்கி, தன் பிள்ளையைப் பெற்றோர் படிக்க வைக்கிறார்கள். ஆனால், பிறகுதான் விஷயமே இருக்கிறது.
What's Your Reaction?