நாற்பதுகளின் நயன்தாரா! | காலம் மறந்த கலைஞர்

தேவர்களின் குரு பிரகஸ்பதியின் சாபத்துக்கு ஆளான ரம்பையின் கதையை, 40கள் தொடங்கி 60கள் வரையிலும் பலமுறை படமாக்கி இருக்கிறது தமிழ் சினிமா.

Sep 29, 2025 - 18:55
 0  4
நாற்பதுகளின் நயன்தாரா! | காலம் மறந்த கலைஞர்

தேவர்களின் குரு பிரகஸ்பதியின் சாபத்துக்கு ஆளான ரம்பையின் கதையை, 40கள் தொடங்கி 60கள் வரையிலும் பலமுறை படமாக்கி இருக்கிறது தமிழ் சினிமா. ஆனால், ரம்பை என்று ஒருவரைத் திரையில் காட்டினால், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் வசீகர அழகு அந்த நடிகைக்கு இருக்க வேண்டுமல்லவா? கே.எல்.வி.வசந்தா அப்படியொரு வசீகரக் கதாநாயகியாக விளங்கி, 40களின் ரசிகர்களை இன்றைய நயன்தாரா போல் கிறங்கடித்தார்.

எம்.கே.தியாகராஜ பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி இருவரையும் 1934இல் வெளியான ‘பவளக்கொடி’ படத்தில் அறிமுகப்படுத்தினார் கே.சுப்ரமணியம். வெள்ளி விழா கொண்டாடிய அந்தப் படத்தில் நடனமாடும் பெண்களில் ஒருவராக அறிமுகமானவர்தான் ராமநாத புரம் அருகேயுள்ள குன்றத்தூரில் பிறந்து, சென்னையில் வளர்ந்த கே.எல்.வி.வசந்தா. சிறு வயது முதலே பாடல், நடனம் இரண்டையும் திறம்படக் கற்றுக்கொண்டவர். இனிய குரல் வளமும் குறைவான உயரம் என்றாலும் காண்போரை முதல் பார்வையிலேயே கவர்ந்துவிடும் அழகிய தோற்றமும் கொண்டவர். நடனத்தில் நளினமும் அடவுகளில் அழகும் இருந்ததால் இவர் நாயகியாக நடிக்கும் படங்களில் ஒரு நாட்டிய நாடகத்தையும் இடம்பெறச் செய்வதை ஒரு வணிக உத்தியாகவே அன்றைய இயக்குநர்கள் கடைப்பிடித்தார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow