சட்டமும் நீதியும் - நீதியின் மீது பாயும் ஒளி! | ஓடிடி உலகம்
நீதி எல்லா உயிர்களுக்குமானது. எனவேதான் நீதியை நிலை நாட்டும் கருவியான சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற நிலையை அரசமைப்பு உறுதிபட வரையறுத்து. அப்படிப்பட்ட நீதியை நிலைநாட்டவே நீதி மன்றங்கள் இருக்கின்றன.

நீதி எல்லா உயிர்களுக்குமானது. எனவேதான் நீதியை நிலை நாட்டும் கருவியான சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற நிலையை அரசமைப்பு உறுதிபட வரையறுத்து. அப்படிப்பட்ட நீதியை நிலைநாட்டவே நீதி மன்றங்கள் இருக்கின்றன. ஆனால், சாமானியர்களுக்குப் பெரும்பாலான சூழ்நிலையில் நீதி தேவதையின் கடைக்கண் பார்வை கிடைப்பதில்லை. அதற்குத் தடையாகச் சட்டப் பரிபாலனம் செய்யும் காவல் துறையும், அதை மயக்கத்தில் ஆழ்த்திவிடும் ஊழலும் காரணமாக இருக்கின்றன.
நீதி கிடைக்கும் என நம்பி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்து, தீக்குளித்து மாண்டுபோகிறார் குப்புசாமி என்கிற ஓர் ஏழைத் தந்தை. அடையாள மற்றவர் என்று காரணம் காட்டி, இறந்தவரைப் பற்றிய எந்த விசாரணையும் செய்யாமல் காவல் துறையே அவரது எரிந்த உடலை எரியூட்டிவிடுகிறது. ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கான அடையாளத்தையே அலட்சியப்படுத்திவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறது.
What's Your Reaction?