வசந்த ராணியின் வருகை!
சென்னை எங்கும் ரோஸ் அல்லது இளஞ்சிவப்பு நிறப் பூக்கள் பூத்துக்குலுங்கும் மரங்களை கடந்த 10 நாட்களாகப் பார்க்க முடிகிறது.

சென்னை எங்கும் ரோஸ் அல்லது இளஞ்சிவப்பு நிறப் பூக்கள் பூத்துக்குலுங்கும் மரங்களை கடந்த 10 நாட்களாகப் பார்க்க முடிகிறது. இந்த மரங்களிலிருந்து கீழே விழும் பூக்கள் காற்றில் மிதந்து வருவதையும், தரையில் ஒரு இளஞ்சிவப்பு மலர்ப்படுக்கையை அமைத்திருப்பதையும்கூடப் பார்த்திருக்கலாம். இலைகளை மறைத்தவாறு, இலைகளே தெரியாமல் பூக்கள் மலர்ந்திருக்கும் இந்த மரம், மலரின் பெயர் என்ன?
ரோசி டிரம்பெட் (tabebuia rosea) என்கிற மரமே இது. இந்த மலர்கள் டிரம்பெட் இசைக்கருவியை ஒத்திருப்பதால் இந்த மரத்துக்கு இப்படிப் பெயர் வந்துள்ளது. தமிழில் இந்த மரத்துக்கு வசந்த ராணி என்கிற பெயர் வழங்கப்படுகிறது.
What's Your Reaction?