வாழ்வில் ஒளியேற்றிய சுயதொழில் | வாழ்ந்து காட்டுவோம்!
என் பெயர் நளினி. நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டாரம், சிறுவல்லிக்குப்பம் ஊராட்சியில் வசித்துவருகிறேன்

என் பெயர் நளினி. நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டாரம், சிறுவல்லிக்குப்பம் ஊராட்சியில் வசித்துவருகிறேன். எனக்குத் திருமணம் ஆகி ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். என் கணவர் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்திவருகிறேன். எங்களின் குடும்பத்தின் கூடுதல் வருமானத்திற்காகத் தொழில் தொடங்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாக எங்கள் கிராமத்தின் தொழில்சார் சமூக வல்லுநர் சங்கீதா, தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்குத் தொழில் தொடங்குவதற்குப் பயிற்சியுடன் கூடிய உதவி இருப்பதாகக் கூறினார். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சமுதாயத் திறன் பள்ளி மூலமாக 20 பேர் கொண்ட குழுவிற்கு ‘ஸ்கிரீன் பிரின்டிங்’ பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்கள்.
What's Your Reaction?