‘மம்மி’ களாக்கப்பட்ட செல்லங்கள்! | வரலாறு முக்கியம் மக்களே! - 03

அன்றைய எகிப்தியர்களுக்கு உயிருக்கு நிகரான செல்லமான உயிரினம் என்றால் அது பூனைதான். எகிப்தியர்கள் வழிபட்ட கடவுள்களில் விலங்குகள், பறவைகள் உருவம் கொண்டவர்களே அதிகம்.

Jun 18, 2025 - 13:30
 0  4
‘மம்மி’ களாக்கப்பட்ட செல்லங்கள்! | வரலாறு முக்கியம் மக்களே! - 03

‘ஐயையோ… வீடு தீப்பிடிச்சிருச்சு... பூனை உள்ளேதான் இருந்துச்சு. முதல்ல அதைக் காப்பாத்துங்க...’ பண்டைய எகிப்தில் வீடு ஒன்று தீப்பிடித்து விட்டால் எகிப்தியர்கள் வீட்டில் இருப்பவர்களோடு தங்கள் குடும்ப உறுப்பினராகவே கருதிய செல்லப் பூனைகளைக் காப்பாற்றுவதில் கவனமாக இருந்திருக்கிறார்கள்.

அன்றைய எகிப்தியர்களுக்கு உயிருக்கு நிகரான செல்லமான உயிரினம் என்றால் அது பூனைதான். எகிப்தியர்கள் வழிபட்ட கடவுள்களில் விலங்குகள், பறவைகள் உருவம் கொண்டவர்களே அதிகம். அதில் பூனையும் முக்கியமான கடவுள். அந்தப் பெண் மியாவ் கடவுளின் பெயர் ‘பாஸ்டெட்’.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow