48 மணி நேரச் சாதனை! | சினிப்பேச்சு

எல்லாக் காலத்திலும் திறமையான கலைஞர் களைக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் தற்போது ‘டெவிலன்’ என்கிற முழுநீளத் தமிழ்த் திரைப்படக்குழுவின் சாதனை பேசு பொருளாகி யிருக்கிறது.

Jun 27, 2025 - 12:10
 0  3
48 மணி நேரச் சாதனை! | சினிப்பேச்சு

எல்லாக் காலத்திலும் திறமையான கலைஞர்களைக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் தற்போது ‘டெவிலன்’ என்கிற முழுநீளத் தமிழ்த் திரைப்படக்குழுவின் சாதனை பேசு பொருளாகியிருக்கிறது. சீகர் பிக்சர்ஸ் சார்பில் பி. கமலக் குமாரி - ந. ராஜ்குமார் தயாரிப்பில், பிகாய் அருண் இயக்கியிருக்கும் இப்படத்தை ‘திரைக்கதை முதல் திரையிடல்’ வரை 48 மணி நேரத்தில் உருவாக்கி உலக சாதனை படைத்திருக்கிறார்கள். இப்படத்தின் முன் தயாரிப்பு, படப்பிடிப்பு, பின் தயாரிப்பு, முதல் பிரதி உருவாக்கம் உள்பட, கடந்த மே மாதம் 29ஆம் தேதி மாலை 4:01 மணிக்குத் தொடங்கி, 31ஆம் தேதி மாலை 3:58 மணிக்குள் படத்தை முடித்துள்ளனர்.

நோபிள் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடுவர்கள் குழுவின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் அவர்களுக்கான திரையிடலுடன் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர். மொத்தம் 47 மணி நேரம் 58 நிமிடங்களில் திரைக்கதை எழுதல், படப்பிடிப்பு, படத்தொகுப்பு, சிறப்பு ஒலி, பின்னணி இசை சேர்த்தல், கலரிங், சப்-டைட்டிலிங், மாஸ்டரிங், திரையிடல் ஆகிய அனைத்தையும் முடித்துக்காட்டி சாதனை படைத்துள்ளனர். இரண்டு மணிநேரம் ஓடும் ‘ஹாரர் த்ரில்லர்’ படமான இது, விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow