திரைப் பார்வை: பேபி and பேபி

90களில் ஆள் மாறாட்டத்தை மையமாக வைத்து வெளியான பல படங்களின் கதைகளை ஒத்திருக்கும் படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள். எல்லாரையும் திரைக்கதைக்குத் தேவையான அளவு பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

Feb 17, 2025 - 15:50
 0  4
திரைப் பார்வை: பேபி and பேபி

வெளிநாட்டில் பணி புரிந்து சென்னை வந்திறங்கி சொந்த ஊரான கோவைக்கு செல்ல தனது மனைவி குழந்தையுடன் விமான நிலையத்தில் காத்திருக்கிறார் சிவா (ஜெய்). அதேபோல் மதுரைக்குச் செல்ல மனைவி, குழந்தையுடன் காத்திருக்கிறார் குணா(யோகி பாபு). எதிர்பாராதவிதமாக சிவாவின் ஆண் குழந்தை குணாவிடமும், குணாவின் பெண்குழந்தை சிவாவிடமும் இடமாறிவிடுகின்றன.

ஜமீன்தாரான சிவாவின் அப்பா (சத்யராஜ்) தனது பரம்பரை சொத்துக்காக ஆண் வாரிசையும், ஜோதிடம் மற்றும் சகுனங்களில் தீவிர நம்பிக்கைக் கொண்டவரான குணாவின் அப்பா இளவரசு பெண் வாரிசையும் எதிர்பார்த்திருக்கிறார்கள். பெற்றோர் எதிர்பார்த்தபடி வாரிசுகள் பிறந்ததில் மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பிய இருவருடைய குழந்தைகளும் மாறியிருப்பது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடை, மாறிய குழந்தைகளை மாற்றிக்கொள்ள அடுத்து வரும் இரண்டு நாட்களில் இவர்கள் படும் அல்லல்கள்தான் கதை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow