சொர்க்கம் எங்கே இருக்கிறது? | தேன் மிட்டாய் 32
தூய்மையான, மிருதுவான மேகக்கூட்டங்களுக்கு நடுவில்தான் சொர்க்கம் இருந்தாக வேண்டும் இல்லையா? எனக்கு எல்லா மதங்களிலும் நண்பர்கள் உண்டு என்பதால் எல்லாரிடமும் தனித்தனியே இது குறித்துப் பேசி இருக்கிறேன்.

வானில் என்பார்கள் பலர். கடவுள் எங்கே இருப்பாரோ அங்கேதான் சொர்க்கமும் இருக்கும் என்பது இவர்களுடைய நம்பிக்கை. தூய்மையான, மிருதுவான மேகக்கூட்டங்களுக்கு நடுவில்தான் சொர்க்கம் இருந்தாக வேண்டும் இல்லையா? எனக்கு எல்லா மதங்களிலும் நண்பர்கள் உண்டு என்பதால் எல்லாரிடமும் தனித்தனியே இது குறித்துப் பேசி இருக்கிறேன்.
எல்லாருமே வானத்தைத்தான் எனக்குக் காட்டினார்கள். சொர்க்கம் மேல் உலகில்தான் இருக்கிறது எல்வின். இதில் என்ன சந்தேகம் உனக்கு? இன்னொரு தரப்பு நண்பர்களோ, என்னது சொர்க்கமா? அது ஓர் அழகிய கற்பனை என்று கை விரித்துவிட்டனர்.
What's Your Reaction?