‘ஏஞ்சல்’ படத் தயாரிப்பாளர் இழப்பீடு கோரிய வழக்கு: உதயநிதி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
‘ஏஞ்சல்’ படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால், 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி பட தயாரிப்பாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: ‘ஏஞ்சல்’ படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால், 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி பட தயாரிப்பாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “உதயநிதி கதாநாயகனாக நடிக்க, நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில்,‘ஏஞ்சல்’என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கி, 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.
What's Your Reaction?