தனித்திறனில் கவனம் செலுத்தலாமா? | மனதின் ஓசை

மற்ற விஷயங்களில் கெட்டிக்காராக இருந்தாலும் படிப்பில் ஆர்வமில்லாமல் இருப்பதால், முகில் வேண்டுமென்றே இப்படிச் செய்வதாக அவருடைய பெற்றோரும் ஆசிரியர்களும் நினைக்கத் தொடங்கினர்.

Jan 1, 2025 - 11:55
 0  2
தனித்திறனில் கவனம் செலுத்தலாமா? | மனதின் ஓசை

ஏழாம் வகுப்பு படிக்கும் முகில் கீபோர்டு இசைப்பதிலும் கால்பந்து விளையாட்டிலும் கில்லி. பல விஷயங்களில் மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தபோதிலும் எழுதுவது, படிப்பது, கணக்குப் போடுவதற்கு அவர் பெரிதும் சிரமப்படுகிறார். எவ்வளவு முயற்சி செய்தாலும் சக மாணவர்களைப் போல அவரால் பாடத்தைக் கற்க முடிய வில்லை என வருத்தப்படுகிறார்.

என்ன சவால்? - மற்ற விஷயங்களில் கெட்டிக்காராக இருந்தாலும் படிப்பில் ஆர்வமில்லாமல் இருப்பதால், முகில் வேண்டுமென்றே இப்படிச் செய்வதாக அவருடைய பெற்றோரும் ஆசிரியர்களும் நினைக்கத் தொடங்கினர். முகிலின் கற்றல் சார்ந்த இயலாமையைப் பற்றி அறிந்து கொள்ளாமல், அவர் மீது கோபப்பட்டு எதிர் மறையாக அணுகினர். இதனால் வகுப்பில் நன்றாகப் படிக்கக்கூடிய நண்பர்களிடம் இருந்து விலகி, தனிமையில் இருக்கத் தொடங்கினார் முகில். படிப்பைத் தவிர இதர திறமைகளை வெளிப்படுத்த, வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்காத சூழலில் கூடுதல் மன உளைச்சலுக்கும் உள்ளானார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow