பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை | இதோ வேலை!

முறையாகப் பயிற்சி செய்து தன்னம் பிக்கையோடும் விடாமுயற்சியோடும் தேர்வை எதிர்நோக்கினால் வெற்றி நிச்சயம். ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மத்திய அரசுப் பணிகள் நிரப்பப்படுகின்றன.

Jan 1, 2025 - 11:55
 0  6
பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை | இதோ வேலை!

ஆண்டுதோறும் பல லட்சம் விண்ணப்பதாரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பித்தாலும் அனைவருக்கும் அரசு வேலை கிடைப்பதில்லை. ஆனால், முறையாகப் பயிற்சி செய்து தன்னம் பிக்கையோடும் விடாமுயற்சியோடும் தேர்வை எதிர்நோக்கினால் வெற்றி நிச்சயம். ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மத்திய அரசுப் பணிகள் நிரப்பப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக ஒருங் கிணைந்த பட்டதாரி நிலை (SSC-CGL) தேர்வின் மூலம் பட்டதாரிகள் பல் வேறு வேலைகளில் நியமிக்கப்படுகின்றனர்.

ஏ.எஸ்.ஓ. எனப்படும் உதவிப் பிரிவு அதிகாரி (மத்தியச் செயலகச் சேவை), வருமான வரி ஆய்வாளர் (வருமான வரித் துறை), உதவி அமலாக்க அதிகாரி (அமலாக்கத் துறை இயக்குநரகம்), இளநிலை புள்ளியியல் அதிகாரி (புள்ளியியல் அமைச்சகம்), துணை ஆய்வாளர் (மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு), சிபிஐ அதிகாரி போன்று மத்திய அரசு அலுவலகப் பதவிகள் இத்தேர்வின் மூலம் நியமனம் செய்யப்படும் முக்கியப் பதவிகள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow