அகக்கண்ணில் தெரிந்தவர் முகக்கண்ணில் தெரிந்தால்... | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 19

ஒன்பது பாசுரங்களில் திருமாலை  வைகுண்டநாயகனாக, உலகளந்த பெருமாளாக, ராமேஸ்வரனாக, நரசிம்மமூர்த்தியாக, திருவேங்கடமுடையானாக, ஆலிலைக் கண்ணனாக திருப்பாணாழ்வார் அனுபவித்து மகிழ்ந்திருந்தாலும் அவையனைத்தும் அவர் ஞானக்கண்ணில் கண்ட காட்சிகள்.

Feb 20, 2025 - 16:50
 0  4
அகக்கண்ணில் தெரிந்தவர் முகக்கண்ணில் தெரிந்தால்... | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 19

மனிதனுக்குப் பிடித்த மகிழ்ச்சிகளில் ஒன்று, தன் அகக்கண்ணில் கண்டதைப் முகக்கண்ணில் காண்பது. ஒன்பது பாசுரங்களில் திருமாலை வைகுண்டநாயகனாக, உலகளந்த பெருமாளாக, ராமேஸ்வரனாக, நரசிம்மமூர்த்தியாக, திருவேங்கடமுடையானாக, ஆலிலைக் கண்ணனாக திருப்பாணாழ்வார் அனுபவித்து மகிழ்ந்திருந்தாலும் அவையனைத்தும் அவர் ஞானக்கண்ணில் கண்ட காட்சிகள்.

நிறைவுப் பாசுரமான பத்தாம் பாசுரத்தை எழுதுவதற்கு முன்புதான் அவர் ஸ்ரீரங்கம் கோயில் பெரிய பெருமாள் சன்னிதிக்குள் புகுந்து பெருமாளை நேருக்கு நேராகச் சந்திக்கிறார். லோக சாரங்கனின் தோள்களில் இருந்தவர் லோகநாயகனின் தாள்களில் போய் அமர்கிறார். குறும்புக்கார கண்ணனாக அவர் முன் தன்னை வெளிப்படுத்துகிறார் ரங்கநாதன். ஆழ்வாரிடமிருந்து ஓர் அழகான பாடல் பிறக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow