ஸ்விஸ் எனும் சொர்க்கம் 13: ‘செர்ன்’ தந்த வியப்பான அனுபவம்!

‘செர்ன்’ ஆராய்ச்சிக் கூடத்தில் என்ன நடக்கிறது என்பதை 20 நிமிட திரைப்படமாக ஓர் அரங்கில் காட்டிக் கொண்டிருந்தார்கள். வர்ணனைக்குரல் முழுவதும் பிரெஞ்சு மொழியில் இருக்க, ‘சப்டைட்டில்’ முழுவதும் ஆங்கிலத்தில் வெளியாகின.

Nov 11, 2024 - 15:48
 0  10
ஸ்விஸ் எனும் சொர்க்கம் 13: ‘செர்ன்’ தந்த வியப்பான அனுபவம்!

எங்களது தவிப்பைப் பார்த்து அங்கிருந்த பிரெஞ்சுக்காரர் ஒருவர் ‘செர்ன்’ உதவியாளரிடம் பேசினார். “பதிவு செய்பவருக்கு மட்டும்தான் அடையாள அட்டையை நாங்கள் வழங்குவோம். அடையாள அட்டை இல்லாதவருக்கு அனுமதி கிடையாது. வேறு வழியில்லை” என்று கூறினார் வரவேற்புக் கூடத்தில் அமர்ந்திருந்த பெண்மணி. (அவர் பெயர் ஃப்ரீடா என்பதையும் அவர் ‘கானா’ தேசத்தைச் சேர்ந்தவர் என்பதையும் பிறகு தெரிந்து கொண்டோம்). பிறகு அந்தப் பெண்மணி எங்களைப் பார்த்து, “இப்படித்தான் ஆன்லைன் புக்கிங்’ சிலசமயம் குழப்பத்தைத் தந்துவிடுகிறது” என்றார் ஆறுதலாக.

பன்னிரண்டரை மணி சுற்றுலாவுக்குப் பதிவு செய்தவர் அதற்குப் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாகவே வரவேற்புப் பகுதிக்கு வந்துவிட வேண்டும் என்பதை மிகக் கண்டிப்பாக கூறி இருந்தார்கள். “பன்னிரண்டரை மணிக்கு யாராவது வந்து சேரவில்லை என்றால் அவரது அடையாள அட்டையை உங்கள் மகனுக்குத் தருகிறோம்” என்றார் ஃப்ரீடா. எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவ்வளவு தூரம் சென்று யாராவது வராமல் இருப்பார்களா என்ன?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow