ஸ்விஸ் எனும் சொர்க்கம் 24:  போரைக் கடந்து வந்த இசைக் குழு

சுவிட்சர்லாந்தின் வெவே என்கிற பகுதியில் நடந்த இசை விழாவுக்குச் சென்றிருந்தோம். அந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த  இசை நடனக் குழுக்கள் பங்கேற்றனர்.

Dec 3, 2024 - 14:55
 0  15
ஸ்விஸ் எனும் சொர்க்கம் 24:  போரைக் கடந்து வந்த இசைக் குழு

சுவிட்சர்லாந்தின் வெவே என்கிற பகுதியில் நடந்த இசை விழாவுக்கு சென்றிருந்தோம். அந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசை நடனக் குழுக்கள் பங்கேற்றன. அங்கு கலந்து கொண்ட இசைக் குழுக்கள் பிரபலமானர்கள் கிடையாது. ஆனால் அங்கு இசை ரசிகர்கள் அதிகம் என்பதால் கணிசமாக பார்வையாளர்கள் வந்திருந்தார்கள்.

குறிப்பாக, பெரும் போரினால் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் உக்ரைனிலிருந்து ஒரு நடனக் குழு வந்திருந்தது. உக்ரைன் இசைக் குழுவில் சிறுவர்களும் இடம்பெற்றிருந்தனர். அழகியலோடு அமைந்திருந்தது அக்குழுவின் நடனம். இந்த நடனக் குழுவை உருவாக்கிய நடாலியா, கிரீனி ஆகியோரிடம் சிறிது நேரம் பேசினோம். தங்கள் குழுவின் பெயர் ’ஸ்வீட்நோக்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். இதன் பொருள் 'சூரிய உதயம்.’ என்று பதிலளித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow