முதல் திகில் முயற்சி! | இயக்குநரின் குரல்
“திகில் படங்கள் நமக்குப் புதிதல்ல. ஆனால், ‘ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர்’ என்கிற வகைமையில் தமிழ் சினிமா இதுவரை ஒரு திரைப்படத்தைக் கூட எடுக்க முயன்றதில்லை.

“திகில் படங்கள் நமக்குப் புதிதல்ல. ஆனால், ‘ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர்’ என்கிற வகைமையில் தமிழ் சினிமா இதுவரை ஒரு திரைப்படத்தைக் கூட எடுக்க முயன்றதில்லை. அதை, 200 சதவீதம் சாதித்தி ருக்கிறோம்” என்கிறார் ‘மர்மர்’ என்கிற படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ஹேம்நாத் நாராயணன். அதீதமான திகில் காட்சிகளுக்காக, தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருக்கும் இந்தப் படம் உருவான பின்னணி குறித்து இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
ஒரு திகில் படத்துக்கு ‘முணுமுணுப்பு’ என்கிற பொருளில் ‘மர்மர்’ எனத் தலைப்பு வைத்தது ஏன்? - ஊரே அடங்கிவிட்ட இரவில், உழைத்த களைப்பில் நீங்கள் அமைதியான தூக்கத்துக்காகக் கண் மூடி அயர்ந்துகொண்டிருக்கிறீர்கள். அப்போது, உங்கள் வீட்டில் உள்ள உறுப்பினர்களில் யாராவது ஒருவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தால்கூட உங்கள் தூக்கம் கெட்டுவிடும். அவ்வளவு ஏன், பக்கத்து வீட்டில் யாராவது இடைவிடாமல் முணுமுணுத்தாலும் உங்களை அது தொந்தரவு செய்யும். இந்தப் படத்தை நீங்கள் பார்த்தால், இரண்டு நாள்களுக்கு மனதளவில் பெரிய தொந்தரவாக இருக்கும் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
What's Your Reaction?