சிவனும் சிவத்தலங்களும் உள்ளம் பெருங்கோயில்... ஊனுடம்பு ஆலயம்!

உடலுக்கு உணவு வேண்டப்படுவது போல, உயிருக்கு வேண்டப்படுவது உள்ளம் நெகிழ்ந்த ஆலய வழிபாடு. `ஆ' வாகிய உயிர் இலயப்படும் இடம் ஆலயம் எனப்பட்டது. ஆலயம் எனினும் கோயில் எனினும் ஒன்றே. கோயில் மனித அங்கங்களை அடிப்படையாகக் கொண்டது.

Jan 3, 2025 - 18:15
 0  5
சிவனும் சிவத்தலங்களும் உள்ளம் பெருங்கோயில்... ஊனுடம்பு ஆலயம்!

உடலுக்கு உணவு வேண்டப்படுவது போல, உயிருக்கு வேண்டப்படுவது உள்ளம் நெகிழ்ந்த ஆலய வழிபாடு. `ஆ' வாகிய உயிர் இலயப்படும் இடம் ஆலயம் எனப்பட்டது. ஆலயம் எனினும் கோயில் எனினும் ஒன்றே. கோயில் மனித அங்கங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால், உள்ளம் பெருங்கோயிலாகவும், ஊனுடம்பு ஆலயமாகவும் கருதப்பட்டது.

பெருங்கோயில் என்பது கோயிலின் உள்ளிருக்கும் கருவறையையும் (கர்ப்பக் கிருகம்), ஆலயம் என்பது சுற்றியுள்ள கோயில் பகுதியையும் குறிக்கும். கோயில் வழிபாடு மக்களின் சமுதாய வாழ்வின் வாழ்க்கை நெறியாக இருந்தது. எனவே, சமய, சமுதாய வளர்ச்சிக்குத் தாயகமாய் விளங்குபவை கோயில்களாகும். கோயில்கள் இயற்கை எழில் மிகுந்த, வளமான, நீர்நிலையுள்ள இடங்களில் அமைத்ததால், அவை கடவுளரின் உறைவிடங்களாயின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow