‘தல’ வியர்டோ - ‘தலை இல்லாத’ மைக் | வரலாறு முக்கியம் மக்களே! - 02
“நாங்க வியர்டோவைப் பார்க்க வந்திருக்கோம்.” "சரி, கைகளுக்கு கையுறை போட்டுக்கோங்க. இல்லேன்னா, உங்க விரல்களுக்குப் பாதுகாப்பு இல்ல.” ”நான் வியர்டோவை போட்டோ எடுக்க வந்திருக்கிறேன்.” ”ஓ. சரி, வேலிக்கு இந்தப் பக்கம் இருந்து எடுங்க.

“நாங்க வியர்டோவைப் பார்க்க வந்திருக்கோம்.” "சரி, கைகளுக்கு கையுறை போட்டுக்கோங்க. இல்லேன்னா, உங்க விரல்களுக்குப் பாதுகாப்பு இல்ல.” ”நான் வியர்டோவை போட்டோ எடுக்க வந்திருக்கிறேன்.” ”ஓ. சரி, வேலிக்கு இந்தப் பக்கம் இருந்து எடுங்க. இல்லேன்னா உங்க கேமரா லென்ஸை அது உடைச்சுரும்.” கலிபோர்னியாவின் வெஸ்ட் பாயிண்ட்டில் அமைந்த கோழிப் பண்ணை ஒன்றில் வியர்டோ என்கிற அந்தப் பிரம்மாண்ட ‘தல’ சேவல் வாழ்ந்துவந்தது. அதன் வாழ்க்கைக் கதை 1964ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பமாகிறது.
வெஸ்ட் பாயிண்ட்டில் வாழ்ந்துவந்த சல்லென்ஸ் என்பவர், தன் நண்பருடன் பந்தயம் கட்டி விளையாடி, ஜெயித்தார். பணம் இல்லாத நண்பர், அதற்குப் பதிலாக சல்லென்ஸிடம் சில கோழிக்குஞ்சுகளைத் தூக்கிக் கொடுத்தார். அதை வீட்டுக்கு எடுத்துவந்த அவர், தன் ஒன்பது வயது மகன் கிராண்ட் சல்லென்ஸிடம் கொடுத்தார். கிராண்ட் அப்படியே அந்தக் கோழிக்குஞ்சுகளை வீட்டின் பின்புறம் விட்டுவிட்டான்.
What's Your Reaction?