கிரிவலப் பாதையில் உள்ள தீர்த்தங்களின் மகிமை | தி.மலை தீபத் திருவிழா சிறப்பு
மனிதர்கள் மக்கள் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டியும் சாபங்கள் நேரிட்ட போதும், திசைக்காவல் தெய்வங்களுக்கு அவர்கள் அண்ணாமலையில் கோயிலும், குளங்களும் அமைத்து அண்ணாமலையாரை நோக்கி தவம் செய்து வந்தனர்.

மனிதர்கள் மக்கள் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டியும் சாபங்கள் நேரிட்டபோதும், திசைக்காவல் தெய்வங்களுக்கு அவர்கள் அண்ணாமலையில் கோயிலும், குளங்களும் அமைத்து அண்ணாமலையாரை நோக்கி தவம் செய்து வந்தனர். அவ்வாறு தோன்றிய தீர்த்தங்கள் 320 ஆகும். காலப்போக்கில் ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பு இன்றி பெரும்பாலான தீர்த்தங்கள் மறைந்து போனது. இருந்தாலும் தற்போது நல்ல நிலையில் உள்ள தீர்த்தங்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
குற்றங்கள் நீக்கும் இந்திர தீர்த்தம்: திருவண்ணாமலையில், இந்திரலிங்கமும் இந்திர தீர்த்தமும் பல நூற்றாண்டுகளாக சிறந்து விளங்குகின்றன. இவை, தேவர்கள் மந்திரங்களாலேயே துதி செய்யப்பட்ட அண்ணாமலைக்கு கிழக்கு திசையில் உள்ளன. தேவர்கள் அதில் தினசரி மூழ்குவதால், சந்தனக் குழம்பின் வாசனையும், கற்பக மலர்களால் ஆன மலையின் மணமும் கமழும். இந்திரன் இந்த தீர்த்தத்தில் குளித்துதான் தான் செய்த குற்றங்கள் நீங்கப்பெற்றான். மேலும், இந்திர பதவியில் நீடிக்க உரிமை பெற்றான். இந்த இந்திர தீர்த்தத்தில் தான் ரமணர் துறவறம் பூண்டார். இந்த தீர்த்தம் இன்று ஐயங்குளம் என அழைக்கப்படுகிறது.
What's Your Reaction?